UAE Tamil Web

செம போதை.. துபாயில் ஸ்கெட்ச் போட்டு லாரியில் டீசல் திருடிய “வெளிநாட்டவர்கள்..” – சத்தமின்றி சிறையில் அடைத்த துபாய் போலீஸ்

அமீரகத்தில் குடிபோதையில் எரிபொருள் டேங்கரில் இருந்து 40 கேலன் டீசலை திருடிய இரண்டு வெளிநாட்டவர்களுக்கு (ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள்) துபாய் குற்றவியல் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் 5,200Dh அபராத தொகையை அவர்கள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து டீசல் திருட முடிவு செய்தனர் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

அந்த டிரக் ஓட்டுநரின் சாட்சியத்தின்படி, ஒரு நபர் உறிஞ்சு குழாயின் ஒரு முனையை தனது வாகனத்தின் டேங்க்கில் இணைப்பதைக் கண்டுள்ளார். அதே நேரத்தில் இரண்டாவது நபர் அதை நிரப்ப குழாயின் மற்றொரு முனையை பிளாஸ்டிக் கண்டைனர் ஒன்றில் வைத்துள்ளார்.

அந்த இரண்டு பேரையும் பிடிக்க முடிந்ததாகவும், அவர்களை பிடித்தபிறகு போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் ஓட்டுநர் கூறினார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

40 கேலன் டீசல் தவிர, தண்ணீர் பம்ப் மற்றும் பிற பொருட்களையும் அவர்கள் திருடியதை அதிகாரிகள் அதன் பிறகு கண்டுபிடித்தனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட முதல் சந்தேக நபர், தாம் கைது செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பெட்ரோலியப் பொருட்களைத் திருட வேண்டும் என்று போதையில் மற்றவரிடம் கூறியதாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து அவர்கள் இருவருக்கு 2 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap