UAE Tamil Web

துபாய்: பயணத்தின்போது வெடித்துச் சிதறிய டயர் : ஒருவர் பலி ; 7 பேர் படுகாயம்..!

Accident

துபாயில் நேற்று மதியம் 1.45 மணிக்கு டயர் வெடித்த நிலையில் எமிரேட்ஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக்கின் மீது பேருந்து ஒன்று மோதியிருக்கிறது. இதில் ஒருவர் பலியானதாகவும் 7 பேர் படுகாயமடைந்ததாகவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற மற்றொரு விபத்தில் ராஸ் அல் கோர் பகுதியில், வேகமாக சென்ற மினிபஸ்-ன் டயர் வெடித்ததால் அது விபத்தினை சந்தித்திருக்கிறது. வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் கான்கிரீட் தடுப்பு மீது மினிபஸ் சென்று மோதியிருக்கிறது. இதனால் டிரைவர் படுகாயமடைந்தார்.

அதேபோல நேற்று இரவு 7.45 மணிக்கு இருசக்கர வாகனம் மீது கார் மோதியிருக்கிறது. இரு வாகனங்களுக்கும் போதிய இடைவெளி இல்லாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

துபாய் போக்குவரத்துக் காவல்துறையின் தற்காலிக இயக்குனர் கர்னல் ஜுமா சலீம் பின் சுவைதான் இதுகுறித்துப் பேசுகையில்,” வாகனவோட்டிகள் தங்களது கார் டயரின் நிலை குறித்து அறிந்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும். ஏனெனில் இந்த வெயில் காலங்களில் டயர் வெடிப்பு எளிதில் நிகழக்கூடிய ஒன்றாகும். மேலும் போதிய இடைவெளியுடன் வாகனங்களை இயக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Accident
2 Shares
Share via
Copy link
Powered by Social Snap