UAE Tamil Web

தள்ளுபடின்னா.. அதுக்காக இப்படியா..? – 2 உணவகங்களுக்கு சீல்…பொதுமக்களை எச்சரிக்கும் காவல்துறை..!

Ajman Shopping Centre

கடந்த வாரத்தில் துபாயில் கொரோனா விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டது நினைவிருக்கலாம். ஆனால் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படவேண்டும் என அரசு எச்சரிந்திருந்தது.

இந்நிலையில் மே 23 – 29 ஆகிய தேதிகளுக்குள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றாத 2 உணவகங்களுக்கு சீல் வைத்துள்ளதாக துபாய் சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது. மேலும் 23 உணவகங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகள் ஒழுங்காக கடைபிடிக்கப்படாததும் ஆய்வின்மூலம் தெரியவந்திருக்கிறது.

அரசு விதித்துள்ள புதிய விதிமுறைகளை நிறுவனங்கள் சரியாக கடைபிடிக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் இதுவரையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய குற்றங்களுக்காக 56 மால்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு அபராதம் விதித்துள்ளதாக துபாய் பொருளாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

தள்ளுபடி, விற்பனைத் திருவிழாவில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் மக்கள், பணம் செலுத்தும் இடங்களில் சமூக வலைத்தளங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Ajman Shopping Centre
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap