UAE Tamil Web

துபாய் டியூட்டி ஃப்ரீ : 2 மாதத்தில் 2வது முறையாக ஜாக்பாட் அடித்த இந்தியக் குழு..!

dubai-duty-free

துபாய் டியூட்டி ஃப்ரீயின் மில்லினியம் மில்லினியர் டிராவில் சென்றமுறை 10 லட்சம் டாலர்கள் பரிசுவென்ற 25 பேர் கொண்ட குழுவிற்கு இம்முறை BMW 760Li xDrive வாகனம் பரிசாகக் கிடைத்திருக்கிறது. இந்தக் குழுவில் ஒருவரான பலக்கல் என்பவர் தனது பெயரில் இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த 51 வயதான பலக்கல் அல் கூசில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குலுக்கலில் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 25 நபர்கள் இணைந்து வாங்கிய டிக்கெட் 10 டாலர்களை வென்றது. கடந்தமுறை தழவீட்டில் என்பவரது பெயரில் டிக்கெட் வாங்கப்பட்டிருந்தது.

ஆனால் இம்முறை பலக்கல் தன்பெயரிலேயே டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். ஷார்ஜாவில் வசித்துவரும் பலக்கலுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய அவர்,” இது எங்களுக்குக் கிடைத்த  மிகப்பெரிய வெற்றி. நாங்கள் தொடர்ந்து டிக்கெட் வாங்குவோம். இந்த டிராவில் கலந்துகொள்ள நான் அனைவரையும் அழைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

துபாய் வாழ் தென்னாப்பரிக்க நபர் டீன் போஸ்ட் என்பவர் Mercedes Benz GLE 53 4M AMG வாகனத்தைப் பரிசாக வென்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அலி அதாரா BMW R 1250 RS வாகனத்தை தட்டிச் சென்றார். துபாயில் வசித்துவரும் இந்தியாவைச் சேர்ந்த ஹஃபிசூர் ரஹ்மான் Aprilla RSV4 மோட்டார் பைக்கை பரிசாக வென்றார்.

dubai-duty-free
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap