UAE Tamil Web

5000 திர்ஹம்ஸ் கடனால் வந்த சண்டை ; 3 பேர் கொலை ; 3 பேர் கவலைக்கிடம் – துபாயில் பரபரப்பு..!

Dubai Police

துபாயில் 5000 திர்ஹம்ஸ் கடனால் 13 பேருக்கு இடையே எழுந்த சண்டையினால் 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணத்திருக்கிறார்கள். மேலும் 3 பேர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடன் பிரச்சினையால் எழுந்த சண்டையில் கத்தி, கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். நைஃப் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகையில் சண்டையில் ஈடுபட்டோர் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்திருக்கின்றனர்.

இதுகுறித்துப் பேசிய குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குனர் பிரிகேடியர் ஜமால் சலீம் அல் ஜல்லாஃப்,” எங்களது படை சம்பவ இடத்திற்குச் செல்லும்போது 3 சடலங்களைக் கண்டோம். சந்தேகத்தின் பேரில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இந்த வழக்கின் மேற்கட்ட விசாரணைகளுக்கான பொது வழக்குத்துறைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜல்லாஃப் தெரிவித்தார்.