UAE Tamil Web

நேற்று நடைபெற்ற மஹ்சூஸ் டிராவில் 32 பேருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

mahzooz

நேற்று இரவு நடைபெற்ற மஹ்சூஸ் டிராவின் குலுக்கலில் இரண்டாம் பரிசான 10 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை 32 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. 5 ல் 4 எண்களை சரியாகத் தேர்ந்தெடுத்திருந்த இந்த 32 பேருக்கும் தலா 31,250 திர்ஹம்ஸ் பரிசுத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் தேர்ந்தெடுத்த எண்கள் 5, 14, 25, 30, 38 ஆகும். அதேபோல 5 ல் 3 எண்களை சரியாக தேர்ந்தெடுத்திருந்த1,465 பேருக்கு தலா 350 திர்ஹம்ஸ் பரிசானது வழங்கப்பட்டிருக்கிறது.

ரேஃபிள் டிராவில் சுசேன், சார்பெல் மற்றும் வித்யா ஆகியோர் தலா 1 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை வழங்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை 1,812,750 திர்ஹம்ஸ் ஆகும்.

10 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுக்கான பிரம்மாண்ட டிரா வரும் நவம்பர் 27 ஆம் தேதி இரவு 9 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இந்த மஹ்சூஸ் டிராவில் கலந்துகொள்வது எப்படி எனத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

mahzooz
2 Shares
Share via
Copy link