UAE Tamil Web

பையில் என்ன இருக்கு? திருதிருவென விழித்த நபர் – துபாய் விமான நிலையத்தில் பரபரப்பு..!

cocaine

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் 3 ஆம் டெர்மினலில் இன்று 9.6 கிலோ கொக்கேன் எனும் போதைப்பொருளை கடத்திவந்த ஆசாமியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

3 லக்கேஜ்களை எடுத்துவந்திருந்த பயணி, சுங்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு குழப்பத்துடன் பதில் சொல்லியிருக்கிறார். அவருடைய உடம்பு வேர்க்கத் துவங்க, லேசான நடுக்கமும் சேர்ந்துகொண்டது. இதனைக் கண்காணித்த அதிகாரிகள், அவரது லக்கேஜ்களை கைப்பற்றி பரிசோதிக்கத் துவங்கினர்.

பைக்குள் பக்காவாக வைக்கப்பட்டிருந்த கொக்கேனை அதிகாரிகள் வெளியே எடுத்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய டெர்மினல் 3 ன் தற்காலிக இயக்குனர் கலீபா பின் ஷாஹின்,” கடத்தல்காரர்கள் இப்போது மிகவும் நுட்பமான வழிகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துவருகிறார்கள். ஆனால் மிகவும் பயிற்சி பெற்ற எங்களுடைய வல்லுநர் படை அவர்களது இந்த முயற்சிகளை முறியடிக்கும்” என்றார்.

“போதை மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைத் தடுப்பதில் அமீரகம் உலகளாவிய அளவில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதற்காக பல்வேறு டெக்னாலஜி, திட்டங்கள், பயிற்சி பெற்ற வல்லுனர்கள் குழு பயன்படுத்தப்பட்டுவருகிறது” என பயணிகள் கட்டுப்பாட்டுப் பிரிவு இயக்குனர் இப்ராஹீம் கமாலி தெரிவித்தார்.

துபாய் விமான நிலையத்தில் ஸ்மார்ட் பேக் இன்ஸ்பெக்ஷன் சிஸ்டம் (Smart Bag Inspection System), துபாய் சுங்கத்துறையின் ஸ்மார்ட் ரிஸ்க் எஞ்சின் (Smart Risk Engine) ஆகியவை தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

cocaine
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap