UAE Tamil Web

துபாய்-அபுதாபி பேருந்து சேவை மீண்டும் துவக்கம் – பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?

BUS RTA

துபாயில் இருந்து அபுதாபி செல்லும் E101 வழித்தடத்தை மீண்டும் துவங்க இருப்பதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. இந்த சேவையானது இப்னு பத்தூதா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபியின் மத்திய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை இயக்க வழிவகுக்கிறது.

RTA வின் திட்டமிடுதல் மற்றும் தொழில் மேம்பாட்டுப் பிரிவு இயக்குனர் அதெல் சக்ரி இதுகுறித்துப் பேசுகையில்,”இரு எமிரேட்களுக்கு இடையே அதிகளவில் மக்கள் பயணிக்கும் வழித்தடமாக இது இருக்கிறது. ஆகவே இது மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும்” என்றார்.

அபுதாபிக்குப் பயணிக்கும் நபர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்:

  • தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தங்களது Alhosn அப்ளிகேஷனில் E அல்லது கோல்டன் ஸ்டாரை அதாவது கிரீன் ஸ்டேட்டசை வைத்திருக்க வேண்டும். (PCR டெஸ்ட் எடுத்ததற்கு 5 நாட்கள் வரையில் இது திரையில் தோன்றும்)
  • தடுப்பூசி எடுக்காதவர்கள் தங்களது பயண நேரத்திற்கு 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருத்தல் வேண்டும்.
  • DPI பரிசோதனை முடிவுகளை வைத்து, இருமுறை அபுதாபிக்குள் நுழைய முடியாது.

குடியிருப்பாளர்கள், சுற்றுலாவாசிகள் அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து அபுதாபி வர விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சமீபத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி,

தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் அபுதாபி வந்ததற்குப் பிறகு PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. போலவே, தடுப்பூசி எடுக்காத, நெகட்டிவ் PCR பரிசோதனை சான்றிதழுடன் அபுதாபிக்குள் வந்தவர்கள் 4 மற்றும் 8 ஆம் நாளில் மீண்டும் PCR  பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

DPI முடிவுகளைக்கொண்டு அபுதாபிக்குள் வந்தவர்கள் 3 மற்றும் 7 வது நாளில் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

BUS RTA
17 Shares
Share via
Copy link
Powered by Social Snap