UAE Tamil Web

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக மீண்டும் துபாய் தேர்வு!

2021 ஆம் ஆண்டில் சர்வதேச பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமாக துபாய் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான உலகளவில் மிகவும் பரபரப்பான முதல் 10 விமான நிலையங்களை தொழில்துறை அமைப்பு வெளியிட்டது. அதில் துபாய் விமான நிலையத்துக்கு சென்ற 2021 ஆம் ஆண்டு 29.1 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.7 சதவீதம் அதிகமாகும்.

2021 ஆம் ஆண்டில் மொத்த உலகளாவிய பயணிகளின் எண்ணிக்கை 4.5 பில்லியனுக்கு இருக்கும் என்று ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் மதிப்பிடப்பட்டது.

கொரோனாவுக்கு முன் தொடர்ச்சியாக பரபரப்பான விமான நிலையம் என்று பெயர் பெற்ற துபாய் விமான நிலையம் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

மொத்த பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் 2021 தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து டல்லாஸ்/ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையம் மற்றும் டென்வர் சர்வதேச விமான நிலையம் உள்ளன.

2020 இல் பயணிகளின் எண்ணிக்கையில் முதலிடத்தை பிடித்த, குவாங்சோ பாய் யுன் சர்வதேச விமான நிலையம் 2021 இல் 8 இடத்திற்கு சென்றது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap