UAE Tamil Web

துபாய் விமானநிலையத்தில் பயணியின் வாட்சைத் திருடிய ஊழியர்..!

Neveda watch

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணியின்போது பயணியின் கைக்கடிகாரத்தைத் திருடிய ஊழியர் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்தாண்டு மே மாதம் அமெரிக்காவில் இருந்து துபாய் வந்த பயணியிடம் இருந்து 945 திர்ஹம்ஸ் மதிப்புள்ள நெவடா கைக்கடிகாரத்தை ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 26 வயது பணியாளர் திருடியிருக்கிறார்.

தொழிலதிபரான அந்தப் பெண் பயணியிடம் பணிபுரியும் பணியாளர் ஒருவர், ஆப்பிரிக்க இளைஞர் கைக்கடிகாரத்தை திருடுவதைப் பார்த்திருக்கிறார். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஸ்கேனர் இயந்திரத்திற்குள் வைக்கப்பட்ட வாட்ச்சைக் காணவில்லை என பணியாளர் குற்றம் சாட்டியதை அடுத்து காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. காவல்துறையில் விசாரணையில் இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தனது சொந்த உபயோகத்திற்காக வாட்சைத் திருடியதாக அந்த இளைஞர் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.

Neveda watch
0 Shares
Share via
Copy link