துபாய் விமான நிலையத்தின் வடக்கு பகுதி ஓடுபாதை மறுசீரமைப்புத் திட்டம் துவங்கிய 45 நாட்களில் முடிவடைவதற்கு மிகவும் இறுக்கமான கால அட்டவணையில் தற்போது வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும் வரும் ஜூன் 22, 2022 அன்று விமானப் போக்குவரத்துக்காகத் அது திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. துபாய் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம், துபாய் விமான நிலையங்களின் தலைவர் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் & குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி ஆகியோர் நேற்று புதன்கிழமை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு ஓடுபாதையில் நடக்கும் வேலைகளை ஆய்வு செய்தார்.
நிபுணத்துவம் பெற்ற பல்வேறு பன்னாட்டுக் குழுக்கள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகள் முடிக்கப்படுவதை உறுதிசெய்யும் என்று ஷேக் அஹ்மத் தளப் பயணத்தின் போது, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்.
ஷேக் அகமது, குழுக்களின் முயற்சிகளைப் பாராட்டினார், “வடக்கு ஓடுபாதை மறுசீரமைப்புத் திட்டம், பயணிகளின் தொடர்ச்சியான வருகையை எளிதாக்குவதற்கும் பூர்த்தி செய்வதற்கும் மற்றும் அமீரகத்தின் விமானப் போக்குவரத்துத் துறையின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.
வடக்கு ஓடுபாதை கடந்த 2014ல் ஒரு பெரிய மறுசீரமைப்பிற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் புனரமைக்கப்படும் இந்த ஓடுபாதையில் 4,230க்கும் மேற்பட்ட அதிநவீன LED ஏர்ஃபீல்ட் லைட்டிங் (AFL) மேம்படுத்தப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
400 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் 3,800 தொழிலாளர்கள் இந்த திட்டத்தை முடிக்க வேலை செய்துவருகின்றனர்.