துபாய் ஏர்போர்ட் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடைசெய்ய உறுதி எடுத்துள்ளது.!

Dubai Airport Pledge to Ban Single Use Plastic
Image Credit: WAM

துபாய் ஏர்போர்ட் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யவதாக உறுதிமொழி எடுத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் துபாய் ஏர்போர்ட் 43 ஆயிரம் டன் அளவிற்கு அதிகமான பேப்பர், கிளாஸ் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய இதர கழிவுகள் அனைத்தையும் மறுசுழற்சி செய்கிறது.

கடந்த 6 மாதத்தில் மட்டும் துபாய் ஏர்போர்ட் 16 ஆயிரம் டன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் மூடிகளை சேகரித்து அப்புறப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 90 மில்லியன் மக்கள் இந்த ஏர்போர்ட்க்கு வந்து செல்கின்றனர். நுகர்வோர் இடத்திலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை நீக்க, எங்களால் முடியும்! என்று நாங்கள் நம்புகிறோம்! என்று ஏர்போர்ட் ஆணையம் கூறியுள்ளது.

Loading...