துபாய் விமான நிலையத்தில் மொபைல் ஃபோன்களை திருடியவருக்கு மூன்று மாத சிறை தண்டனையும் 28 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறைத் தண்டனைக்குப் பிறகு அவரை நாடு கடத்தவும் துபாய் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின் போது, சன்கிளாஸ் வாங்குவதற்காக, திருடிய ஆறு மொபைல் போன்களை பாதி விலைக்கு விற்றதாக குற்றவாளி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
போலிஸாரின் அறிக்கைப்படி, இந்த வழக்கு மார்ச் 2021-க்கு நிகழ்ந்ததாகவும், பயணிகள் சொந்த நாட்டுக்கு புறப்படும் சமையத்தில் தனது சூட்கேஸில் இருந்து மொபைல் போன்கள் காணாமல் போனதாகக் குற்றம் சாட்டினர்.
இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண உதவிய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததாகவும் போலிஸார் தெரிவித்தனர்.
இதனைய அடுத்து திருடப்பட்ட தொலைபேசிகள், கறுப்புக் கண்ணாடிகள் மற்றும் இதர பாகங்கள் ஒன்று சந்தேகித்த நபரின் வீட்டில் இருந்தது தெரியவந்தது.
அடுத்தக்கட்ட விசாரணையின் போது, 6 தொலைபேசிகளை திருடியதாகவும், அவற்றில் 5 மொபைலை பயன்படுத்திவிட்டு போன் கடைக்கு 10 ஆயிரம் திர்ஹம்ஸுக்கு விற்றதாகவும் குற்றவாளி ஒப்புக்கொண்டார். 5 ஆயிரம் திர்ஹம்ஸ் மதிப்புள்ள சன்கிளாஸ்கள், ஒரு கேமரா, ஒரு மொபைல் போன், ஒரு வயர்லஸ் ஹெட்செட் மற்றும் பிற பாகங்கள் வாங்க அந்தத் தொகையைப் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.