UAE Tamil Web

துபாய் விமான நிலையத்தின் ஓடுபாதை மூடல்.. எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பு!

துபாய் சர்வதேச விமான விமான நிலையத்தின் இரண்டு ஓடுதளங்களில் ஒரு ஓடுதளம் மே மாதம் முதல் 45 நாட்களுக்கு மூடப்பட இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

இந்த ஓடுதளம் மூடல் காரணமாக கோடைகால தொடக்கத்திற்கு முன் விமான சேவைகளும் குறைக்கப்படும் என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறியிருந்தது.

ஓடுதளம் மூடல் குறித்து எமிரேட்ஸ் நிறுவனம் 2014 ஆண்டு தெரிவித்த அறிக்கையில், எமிரேட்ஸ் விமான நிறுவனம் மற்றும் அதன் விமான நிலைய ஆப்ரேட்டரான dnata ஆகியவற்றில் 657 மில்லியன் டாலர் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறுகிறது. மே – ஜூலை 2014 ஆம் ஆண்டு துபாய் விமான நிலையங்களின் பயணிகளின் எண்ணிக்கை 16 மில்லியனிலிருந்து 15.4 மில்லியனாகக் குறைந்தது, மேலும் 2013 ஆம் ஆண்டின் மே – ஜூலை ஒப்பிடும்போது ஜூன் 8.5 சதவீதம் குறைவாக இருந்தது.

2019 ஆம் ஆண்டில் 45 நாள் ஓடுபாதை மூடல் காரணமாக எமிரேட்ஸ் விமான போக்குவரத்தை குறைத்தது. இதனால் பயணிகளின் வருவாயில் 3.9 சதவீதம் குறைந்தது. ஓடுபாதை மூடல் மற்றும் 2019-2020இல் கொரோனா பாதிப்புகளால் குறைவான விமானங்கள் இயக்கப்பட்டு சரக்கு திறனில் 10 குறைந்தது. அதோடு dnata 3 சதவீதத்திற்கும் குறைவான விமானங்களைக் கையாண்டது.

துபாய் விமான நிலையம் 2019 ஆம் ஆண்டிற்கான மாதாந்திர போக்குவரத்து விவரங்களைக் குறிப்பிடவில்லை, இதனால் அந்தாண்டு 45 நாள் ஓடுபாதை மூடப்பட்டதன் தாக்கம் குறித்து தெளிவான விவரங்கள் இல்லை. இருப்பினும் 2018 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் 9.2 சதவீதம் போக்குவரத்து குறைந்து 19 மில்லியன் பயணிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap