UAE Tamil Web

அடுத்த 10 நாட்களில் வரலாறு காணாத கூட்டத்தை சந்திக்க இருக்கும் துபாய் விமான நிலையம் – பயணிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டது DXB..!..!

Stock-Dubai-airport-passengers_

துபாய் சர்வதேச விமான நிலையங்களில் ஆகஸ்டு 12 – 22 ஆம் தேதிவரையில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என துபாய் சர்வதேச விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கோடைக்கால விடுமுறைகளுக்குச் சென்று அமீரகம் திரும்பும் மக்கள் மற்றும் தளர்த்தப்பட்டுள்ள பயண விதிமுறைகள் காரணமாக துபாய் விமான நிலையம் இந்த வருடத்தின் மிக பரபரப்பான வாரத்தை சந்திக்க இருக்கிறது.

இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையங்களை உபயோகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும் எனவும் இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு உங்களுடைய பயணத்தைத் திட்டமிடவும் துபாய் விமான நிலையங்கள் வலியுறுத்தியுள்ளன.

ஆசிய நாடுகளில் இருந்து துபாய் திரும்புவோருக்கான பயண விதிமுறைகள் கடினமானவை என்பதால் வரும் வாரத்தில் DXB க்கு வரும் பயணிகள் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அமீரகத்தினை ரெட் லிஸ்டில் இருந்து ஆம்பர் லிஸ்டிற்கு பிரிட்டன் மாற்றியிருப்பது பயணிகள் வரத்தை கணிசமாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

இருப்பினும் பயணிகள் கீழ்க்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என துபாய் சர்வதேச விமான நிலையங்கள் தெரிவித்துள்ளன.

  • உங்களது பயணத்திற்கு தேவைப்படும் ஆவணங்களின் பட்டியலை அவ்வப்போது விமான நிறுவனத்திடம் பேசி உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பே, உங்களுடைய டெர்மினல் எது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
  • நீங்கள் பயணிக்கும் நாடு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றியிருக்கிறீர்களா? என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். (புறப்பாட்டின்போது எடுக்கப்படும் PCR பரிசோதனை குறித்து மறக்க வேண்டாம்)
  • நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் காரை பார்க் செய்யவும். அல்லது வாலட் சேவையைப் பயன்படுத்தவும். விருந்தினர்களை அழைத்துச்செல்ல பயணிகள் வருகை இடத்தில் காரை நிறுத்துவது தேவையற்ற போக்குவரத்து இடையூறை உண்டாக்கும்.
  • முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை எந்நேரமும் பின்பற்றவேண்டும்.
  • கொரோனா அறிகுறிகள் இருந்தால், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து மருத்துவரை நாடவும்.
  • விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்பு உங்களுடைய பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவை செல்லுபடியானதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
  • விடைகூறலை வீட்டிலேயே முடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் உறவினர்களின் வருகையால் கூட்டம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
Stock-Dubai-airport-passengers_
20 Shares
Share via
Copy link