உலகப்புகழ்பெற்ற துபாய் ஏர்ஷோ மிகுந்த உற்சாகத்தோடு நேற்று துவங்கியிருக்கிறது. அமீரகத்தின் போர் விமானங்கள், பயணிகள் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் இந்தக் கண்காட்சி நவம்பர் 18 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கிறது.
அமீரகம் மட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சிறப்பு விமான சாகசக் குழுக்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. நேற்று துவங்கிய இந்த வண்ணமிகு கண்காட்சியை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் துவங்கி வைத்தார்.
Today, I visited the 17th @DubaiAirshow; the largest edition of the mega global event since its inception, featuring 1,200 exhibitors and civil & military delegations representing 148 nations. More than 175 of the world’s most advanced civil and military aircraft are on display. pic.twitter.com/XQWfywxhOq
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) November 14, 2021
துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் இக்கண்காட்சியை நேற்று பார்வையிட்டார்.
அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சர், உயரதிகாரிகள் ஆகியோரும் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டனர். அப்போது வானத்தை வண்ணங்களால் நிரப்பும் அளவிற்கு அட்டகாசமான சாகசங்களை விமானக் குழுக்கள் நிகழ்த்தி அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினர்.
. @HHShkMohd receives Ministers of Defence, Chiefs of Staff of countries participating in the #DubaiAirShow 2021, witnesses part of the aircraft & aerobatics displays. pic.twitter.com/NN3UGOaW4x
— Dubai Media Office (@DXBMediaOffice) November 14, 2021
இந்த பிரம்மாண்டமான வண்ணமய கண்காட்சியினை பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் இலவசமாக ஸ்கைவியூ கிராண்ட்ஸ்டாண்ட் (Skyview Grandstand)-ல் கண்டுகளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மக்கள் முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விமானப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே ஸ்கைவியூ கிராண்ட்ஸ்டாண்ட்-ல் இடம் ஒதுக்கப்படும். ஆனால், இம்முறை பொதுமக்களும் அங்கே சென்று இந்த மிரட்டலான கண்காட்சியைக் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுவும் இலவசமாக.
நவம்பர் 14 – 18 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிமுதல் மாலை 5.30 மணிவரையில் ஸ்கைவியூ கிராண்ட்ஸ்டாண்ட்-ன் மெயின் ஏர்ஷோ ஹாலைத் தவிர பிற இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
