UAE Tamil Web

துபாய்: உலகின் மிகப்பெரிய விமான கண்காட்சியை இலவசமாக காணுங்கள் – விபரம் உள்ளே..!

airshow

உலகப் பிரசித்திபெற்ற துபாய் ஏர்ஷோவின் 17 வது ஆண்டு கண்காட்சி துபாயில் வரும் நவம்பர் 14 -18 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான வண்ணமய கண்காட்சியினை பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் இலவசமாக ஸ்கைவியூ கிராண்ட்ஸ்டாண்ட் (Skyview Grandstand)-ல் கண்டுகளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மக்கள் முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விமானப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே ஸ்கைவியூ கிராண்ட்ஸ்டாண்ட்-ல் இடம் ஒதுக்கப்படும். ஆனால், இம்முறை பொதுமக்களும் அங்கே சென்று இந்த மிரட்டலான கண்காட்சியைக் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுவும் இலவசமாக.

நவம்பர் 14 – 18 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிமுதல் மாலை 5.30 மணிவரையில் ஸ்கைவியூ கிராண்ட்ஸ்டாண்ட்-ன் மெயின் ஏர்ஷோ ஹாலைத் தவிர பிற இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் எக்ஸ்போ 2020 சிட்டி மற்றும் இப்னு பதூதா மால் பேருந்து நிலையங்களில் இருந்து ஏர்ஷோ மையத்திற்குச் செல்ல இலவச பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

airshow
34 Shares
Share via
Copy link