UAE Tamil Web

முக்கியச் செய்தி: துபாயில் நிலநடுக்கம் – கட்டிடங்களிலிருந்து வெளியேறிய மக்கள் – வீடியோ..!

earthquak 1

இன்று (நவம்பர் 14) ஈரானின் தெற்குப் பகுதியில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  மாலை 4.07 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியிருப்பதாக தேசிய வானிலை ஆய்வுமையத்தின் நில அதிர்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு நிமிடம் கழித்து மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கள் ரிக்டர் அளவுகோளில் 6.7 ஆகப் பதிவாகியிருக்கிறது. இதன் தாக்கத்தினால் அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் அதிர்வு ஏற்பட்டிருக்கிறது.

பலரும் இந்த நில அதிர்வை உணர்ந்ததாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலநடுக்கத்தினால் அச்சமடைந்த மக்கள் தங்களது குடியிருப்பு மற்றும் பணிபுரியும் அலுவலகங்களில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கம் எந்த பாதிப்பையும் அமீரகத்தில் ஏற்படுத்தவில்லை என தேசிய வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

 

earthquak 1
41 Shares
Share via
Copy link