துபாயில் உள்ள பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்களுக்கான புதிய நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முஷ்ரிப் தேசிய பூங்கா, சஃபா பார்க், ஜபீல் பார்க், க்ரீக் பார்க் மற்றும் மம்சார் பார்க் உட்பட அனைத்து பொது பூங்காக்களும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதோ பொழுதுபோக்கு தளங்களின் நேரங்கள்:
- துபாய் ஃபிரேம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
- குரானிக் பார்க்: காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
- Glass House and Cave of Miracles: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
- Children’s City: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை
- துபாய் சஃபாரி பார்க்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, மாலை 6 மணி முதல் காலை 12 மணி வரை.
அமீரகத்தில் ரமலான் மாதம் 28 நாட்களை கடந்துவிட்ட நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஊ ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊழியர்களுக்கு ஏப்ரல் 30, சனிக்கிழமை முதல் மே 6 வெள்ளி வரை விடுமுறை நாட்கள் இருக்கும். பின்னர் மே 7 மற்றும் 8 ஆம் தேதி சனி, ஞாயிறு வார விடுமுறை இருக்குமேயானால் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் ஈத் அல் பித்ர் விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.