UAE Tamil Web

நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருந்தா பூஸ்டர் போட்டுக்கோங்க.. துபாய் சுகாதாரத்துறை அறிவுரை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமீரகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 70%க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ள நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர் ஃபைசரின் 3வது தவணையான பூஸ்டர் டோசை செலுத்திக் கொள்ளுமாறு துபாய் சுகாதாரத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புற்றுநோய், ஸ்டெம் செல் சிகிச்சை, தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையோர்கள் மருத்துவரை அணுகிய பிறகு பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3வது அலையில் இருந்து உடல் பலவீனமடைந்தவர்களை பாதுகாக்கும் விதமாக பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

1 Share
Share via
Copy link