UAE Tamil Web

துபாய்: குழந்தைகளுக்கான பால் பாட்டில்களில் பானங்கள் வாங்குவதற்கு தடை..!

baby feeding

துபாயில் குழந்தைகளுக்கான பால் பாட்டில்களில் காபி மற்றும் மற்ற பானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள காபி கடைகளில் சில வாடிக்கையாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கான பால் பாட்டில்களில் காபி மற்றும் மற்ற பானங்கள் வாங்குகின்றனர். எனவே பொதுமக்களும், கடைகார்களும் இதை முற்றிலும் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் பொருளாதார புகார்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இதேபோல தவறான நடைமுறைகளை நிறுத்துமாறு காபி கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான பால் பாட்டில்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துவது உள்ளூர் மரபுகளுக்கும், பழக்க வழக்கத்திற்கும் எதிரானது மட்டுமன்றி இவ்வாறு தவறாக பயன்படுத்துவதால் கொரோனா தொற்று ஏற்பட கூடிய அபாயமும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இது மாதிரியான புகார்களை 600545555 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது என்ற Consumerrights.ae வெப்சைட் மூலமாக தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

சில வாடிக்கையாளர்கள் ஏன் குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் பால் பாட்டில்களில் இவ்வாறான பானங்களை வாங்க விரும்புகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

baby feeding
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap