UAE Tamil Web

அமீரக கடல்களில் மீன்களின் எண்ணிக்கை 88% குறைவு : மீன்பிடி வலைகளுக்குத் தடை : துபாய் அரசின் புதிய அறிவிப்பு..!

FISHING

துபாயின் மீன் வளத்தினைப் பாதுகாக்கவும் கடல்சார் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் விதிமுறை மீறல்களைத் தவிக்கவும் பல திட்டங்களை துபாய் நிர்வாகக் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில், மீன்பிடி வலைகளை உபயோகிக்கத் தடை செய்யும் விதிமுறையும் இடம்பெற்றுள்ளது.

மேலும் முக்கிய மீன் இனங்களுக்கான பிரத்யேக இடங்களையும், தொழில்முறை இனப்பெருக்க இடங்களையும் நிர்வாக கவுன்சில் ஒதுக்கியுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் புதுப்பித்தல், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை உருவாக்குதல் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு ஆகியவை அடங்கும்.

ஒவ்வொரு பகுதிகளுக்குமான மீன்பிடி தடைக்காலத்தினை தீர்மானிப்பது, மீன்பிடி படகுகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பது, மீன்பிடி தடைகாலத்தை கண்காணிப்பது மற்றும் செயல்படுத்துவது, ஒருங்கிணைக்கப்பட்ட தளம் வாயிலாக தொழில்முறை மீன்பிடி உரிமம் பெறுதல், தடைக்காலத்தில் மீன் வளர்ச்சி குறித்த அறிவுரையை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

அமீரக கடற்கரைகளில் மீன் இருப்பு 88 சதவீதம் குறைந்துள்ளதாக நிர்வாக சபை தெரிவித்துள்ளது. ஃபார்ஷ், குரூப்பர் மற்றும் ஷாரி மீன்கள் அதிகப்படியான நுகர்வுக்கு ஆளாகின்றன, இந்த இனங்களின் பங்கு அளவு முறையே ஏழு சதவீதம், 12 சதவீதம் மற்றும் 13 சதவீதம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் வாழ்விடங்களை அழித்தல், நீடித்த மீன்பிடி நடைமுறைகள் மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் காரணமாக உள்ளூர் வணிக மீன்களின் அளவு குறைவாக இருப்பதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என கவுன்சில் தெரிவித்துள்ளது.

FISHING
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap