UAE Tamil Web

அமீரகம்: கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் துவக்கம் – எத்தனையாவது வாரத்தில் போட்டுக்கொள்ளவேண்டும்..?

pregnant_woman_2_other

துபாய் முழுவதிலும் உள்ள துபாய் சுகாதரத்துறையால் நிர்வகிக்கப்படும் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளன.

13 வார கர்ப்ப காலத்திற்குப் பிறகு கருத்தரித்த மகளிர் DHA வின் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலமாகவோ அல்லது 800342 என்ற எண்ணில் வாட்சாப் மூலமாகவோ தடுப்பூசிக்காக விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்துப் பேசிய லதீபா குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். முனா தஹ்லக்.” கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து கடந்தாண்டு டிசம்பர் 23 ஆம் தேதியே அறிவிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி பெறத் தகுதியான சமூகக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன்மூலம் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதே எங்களது திட்டம்” என்றார்.

கர்ப்பிணிகளுக்கு போடப்படும் பைசர் தடுப்பூசிகளை DHA போதுமான அளவு ஒதுக்கியுள்ளது. தடுப்பூசி பெறுவதற்கு முன்னர், தங்களது மருத்தவரை அணுகி இதுகுறித்து கர்ப்பிணிகள் கலந்தாலோசிப்பது நல்லது. குறிப்பாக உடல்நலக்குறைவு உள்ள கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் என தஹ்லக் குறிப்பிட்டார்.

pregnant_woman_2_other
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap