UAE Tamil Web

ஒரு மாதம் கடலில் மிதந்த மர்ம உடலில் கொரானா வைரஸ்..

துபாய் கடற்பகுதியில் மர்மமான முறையில் இறந்த சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. அதனை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை பரிசோதனை செய்ததில் வல்லுநர் குழுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கைப்பற்றப்பட்ட உடலில் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. பொதுவாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிகளிடம் இருந்து தொற்று நீங்கிவிடும். ஆனால் உயிரிழந்து 30 நாட்களாகியும் கொரோனா தொற்று செயலிழக்காமல் உயிரிழந்த உடலில் தென்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இதேபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலில் 17 நாட்களாக கொரோனா வைரஸ் தங்கியிருப்பதை மருத்துவ குழு கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. அந்த உடல் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. கடலில் மிதந்து கைப்பற்றப்பட்ட உடல் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன.

1 Share
Share via
Copy link
Powered by Social Snap