மதுரையில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், மருத்துவ அவசரநிலை காரணமாக இன்று திங்கள்கிழமை கோவா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானத்தில் இருந்த ஆண் பயணி ஒருவர் உடனடியாக SMRC V. M. Salgoocar மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் மற்றும் அந்த பயணியின் உடல்நிலை சீராக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை 9.20 மணியளவில் அந்த விமானம் மதுரையில் இருந்து துபாய் புறப்பட்டுள்ளது, நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது ஒரு ஆண் பயணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் அந்த விமானம் உடனடியாக 10.46 மணிக்கு கோவா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கோவா விமான நிலைய அதிகாரி S.V.T Dhananjaya Roa இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார், தற்போது அந்த பயணி நலமோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த பயணி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் spice jet விமானம் மீண்டும் துபாய் புறப்பட்டது.
கோவா விமான நிலையத்தில் வணிகரீதியான விமானங்கள் காலை நேரங்களில் இயங்காது, காரணம் இந்திய கடற்படை காலை “ஸ்லாட்டைப்” அங்கு பயன்படுத்திவருகின்றது.