UAE Tamil Web

ஈத் அல் அத்ஹா : தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு ஒளிர இருக்கும் புர்ஜ் கலீபா – காணத்தவறாதீர்கள் மக்களே..!

Burj Khalifa

ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களில் புர்ஜ் கலீஃபா கட்டிடம் பல்வேறு வாழ்த்துச் செய்திகளுடன் மிளிர இருக்கிறது.

ஜூலை 20-24 வரையிலான நாட்களில் தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஈத் முபாரக் அனிமேஷன்கள் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் திரையிடப்படும். அதேபோல இரவு 7.45 மணிமுதல் 10.45 மணிவரையில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறையும் சிறப்பு LED காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன.

இதனைக்கான டவுன்டவுன் துபாய்க்கு (Downtown Dubai) வரும் பார்வையாளர்கள் அங்குள்ள துபாய் ஃபவுண்டைனினைத் தவறவிட வேண்டாம். மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருமுறையும் ஃபவுண்டைனில் நீர் விளையாட்டுக்கள் நடைபெற இருக்கின்றன.

Burj Khalifa
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap