துபாய் பேருந்து கோர விபத்து தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது.!

Dubai bus crash: 7-year-jail for driver, Dh200,000 blood money for each victim

துபாய் பேருந்து கோர விபத்து தொடர்பான தீர்ப்பு வெளியாகி உள்ளது.

துபாயில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி நடந்த பேருந்து கோர விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 17 பேர் இறந்தனர். இது குறித்து நாம் முன்னரே பதிவிட்டு இருந்தோம்.

இந்நிலையில் இந்த கோர விபத்தின் வழக்கு துபாய் உயர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

இக்கோர விபத்துக்கு காரணமான 53 வயதான ஓமன் நாட்டை சேர்ந்த ஓட்டுனர் குற்றவாளி எனவும் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவரின் சிறை தண்டனை காலம் முடிந்த பிறகு அவர் நாடு கடத்தப்படவும், நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

மேலும், இந்த கோர விபத்தில் இறந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நிவாரணத் தொகையாக (Blood Money) 2 லட்சம் திர்ஹம் வழங்கப்பட வேண்டும், எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.