UAE Tamil Web

துபாய்: நொடிப்பொழுதில் பற்றிய தீ – முழுவதும் பஸ்பமான கார்..!

car fire

துபாயின் அல் கூஸ் 1 பகுதியில் இன்று மாலை கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனையடுத்து சிவில் பாதுகாப்புப்படை வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து உடனடியாக தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என சிவில் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

car fire 1

சர்வீஸ் ரோட்டில் இந்த தீவிபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து தடையின்றி நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

car fire
0 Shares
Share via
Copy link