UAE Tamil Web

துபாயில் 50 லட்சம் திர்ஹம்சிற்கு ஏலம்போன நம்பர் பிளேட் – அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு அதுல..?

RTA-Auction-Dh5m-number-plate-

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) 108 வது பிரத்யேக நம்பர் பிளேட் ஏலத்தினை சமீபத்தில் நடத்தியிருக்கிறது. இந்த ஏலத்தின் மூலமாக 36.5 மில்லியன் திர்ஹம்ஸ் வருவாய் கிட்டியுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.

சுவாரஸ்யமாக Q 22 என்ற எண்கொண்ட நம்பர் பிளேட் 5 மில்லியன் திர்ஹம்ஸ் தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிக விலைக்கு வாங்கப்பட்ட நம்பர் பிளேட்கள் மற்றும் தொகையை கீழே காணலாம்.

வ.எண் நம்பர் பிளேட் எண் வாங்கப்பட்ட தொகை (திர்ஹம்ஸ்களில்)
1. Z 31 2.820
2. V10000 920,000
3. W500 840,000
4. O66666 840,000

இந்த ஏலத்தில் K-L-M-N-O-P-Q-R-T-U-V-W-X-Z வகையில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு இலக்க எண்கள் கொண்ட மொத்தம் 100 ஃபேன்சி நம்பர் பிளேட்கள் விற்கப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.

இந்த நம்பர் பிளேட்களில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகள், குறியீடுகள், சம்பவங்கள் ஆகியவை தங்களது வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர் கார் உரிமையாளர்கள். இருந்தாலும் ஒரு நம்பர் பிளேட் 50 லட்சம் திர்ஹம்ஸ்-ங்குறது கொஞ்சம் ஓவர் தான்…

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap