UAE Tamil Web

3.8 கோடி திர்ஹம்ஸ்க்கு ஏலம்போன நம்பர் பிளேட் – கோடிக்கணக்கில் குவிந்த பணம் – ஏழைகளின் பசியாற்ற இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என அரசு அறிவிப்பு..!

AA9-plate-at-the-auction_

துபாயில் நடைபெற்ற கார் நம்பர் பிளேட் ஏலம் விடும் விழாவில் 48.49 மில்லியன் திர்ஹம்ஸ் வருவாய் கிடைத்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. அமீரக அரசின் 100 மில்லியன் மீல்ஸ் என்னும் உணவு வழங்கும் திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் நோக்கத்தோடு இந்த ஏலமானது நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் AA 9 எனும் நம்பர் பிளேட்டை பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் 3.8 கோடி திர்ஹம்ஸ் கொடுத்து வாங்கியிருக்கிறார். அவர் இதுகுறித்துப் பேசுகையில்,”இந்த மகத்தான திட்டத்திற்கு உதவ எனக்கு வாய்ப்பளித்த துபாய் ஆட்சியாளருக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.

ஏலம் துவங்குவதற்கு முன்பாக இரண்டு நபர்கள் 550,000 திர்ஹம்ஸ் தொகையை இந்தத் திட்டத்திற்காக அளித்தார்கள். இந்த நிகழ்வானது துபாய் விளையாட்டுக் கவுன்சிலின் தலைவரான ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், எதிசலாட், டூ மற்றும் எமிரேட்ஸ் ஆக்ஷன் ஆகிய அமைப்புகளின் உதவியோடு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உலகளாவிய திட்டங்கள் அமைப்பு இந்த ஏலத்தை ஒருங்கிணைத்தது.

இந்த ஏலத்தில் கார் நம்பர் பிளேட் மட்டுமல்லாது எதிசலாட் போன் நம்பரும் ஏலத்தில் விடப்பட்டது. இந்த நம்பர்கள் அனைத்துமே தனித்துவமானவை. ஏலம் விடப்பட்ட நம்பர்கள் மற்றும் ஏலம் எடுக்கப்பட்ட விலையைக் கீழே காண்போம்.

கார் நம்பர் பிளேட்கள்

AA 9: 38 மில்லியன்
U 31: 2.6 மில்லியன்
E 51: 2.45 மில்லியன்
T 38: 1.8 மில்லியன்

மொபைல் நம்பர்கள்

056 9999999: 3 மில்லியன்
056 5555556: 260,000
056 9999993: 150,000
054 5555558: 130,000
054 9999993: 100,000

இந்த ஏலத்தில் வசூலிக்கப்பட்ட தொகைகள் 100 மில்லியன் மீல்ஸ் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. உலகம் முழுவதும் 30 நாடுகளில் பசித்திருக்கும் மக்களுக்கு உணவு வழங்க இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில் நீங்களும் அமீரக அரசிற்கு உதவலாம். உதவ விரும்புவோர் அதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.