UAE Tamil Web

ஆப்கனில் பாலுக்காகத் தவித்த குழந்தைகள் – 6 டன் பாலை அனுப்பிவைத்த துபாய் ஆட்சியாளர்..!

flight

சமகால அரசியல் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது ஆப்கானிஸ்தான் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றியது தான். இதன் தாக்கம் பல்வேறு வகையில் மக்களை தினமும் வாட்டிவருகிறது. பசி, பட்டினி, சுகாதார குறைபாடுகள் என அம்மக்கள் தங்களது தாய் நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்துவரும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமீரக அரசு பல்வேறு வகையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிவருகிறது. அமீரகம் வழியாக பிற நாடுகளுக்கு அவர்களை அனுப்பிவைக்கும் நோக்கோடு, ஆப்கனில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் அபுதாபி ஹியூமனேட்டேரியன் சிட்டியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 7 விமானங்கள் மூலமாக உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை அமீரகம் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியிருக்கிறது. தற்போது நேற்று எட்டாவது விமானம் மூலமாக 8 டன் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கந்தகார் விமான நிலையத்தில் தரையிறங்கியது அமீரக சிறப்பு விமானம்.

அதில் 2 டன் உணவுப் பொருட்களும், பச்சிளங் குழந்தைகளுக்குத் தேவையான 6 டன் பாலும் அனுப்பிவைக்கப்பட்டன.

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடைய உத்தரவின் அடிப்படையில் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தொண்டு அமைப்பு மூலமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

flight
1 Share
Share via
Copy link