UAE Tamil Web

“எங்க கடைக்கு வாங்க” என்று மக்களுக்கு இம்சை கொடுத்த 10 கடைகளுக்கு சீல் வைத்த துபாய் அதிகாரிகள்..!

Shop-closed

துபாய் பொருளாதாரத்துறை சமீப காலங்களில் 95 கடைகளுக்கு அபராதம் விதித்ததோடு 10 கடைகளுக்கு சீல் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. மக்களை தங்களது கடைகளில் பொருட்களை வாங்கும்படி இம்சித்ததாக துபாய் பொருளாதாரத்துறை இக்கடைகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

வணிக இணக்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஷாப்பிங் மால்களில் உள்ள 91 கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளதாகவும் 96 கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

திறந்தவெளிக் கடைகளைப் பொறுத்தவரையில் 4 கடைகளுக்கு அபராதமும் 9 கடைகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி, தங்களது கடைகளில் பொருட்களை வாங்கும்படி யாரேனும் தொந்தரவு செய்தால் Dubai Consumer அப்ளிகேஷனில் அல்லது நுகர்வோர் பாதுகாப்பு இணையதளத்திற்குச் சென்று disturbing promotion in the market என்னும் வசதியைப் பயன்படுத்தி புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையேல் 600 54 5555 என்ற எண்ணிற்கு கால் செய்யலாம் எனவும் துபாய் பொருளாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Shop-closed
1 Share
Share via
Copy link