துபாயில் நிறுவன ஒன்றில் 191,000 திர்ஹம்ஸை திருடிய 4 பேர் கொண்ட கும்பலுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரனை குறித்து குற்றவியல் நீதிமன்றம், துபாய் அல் நகீல் பகுதியில் நிறுவனத்திலிருந்த கணக்காளரைத் தாக்கி 191,000 திர்ஹம்ஸை திருடிய வெளிநாட்டினர்களான 4 பேர் கொண்ட கும்பலுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்தக் கொள்ளை கும்பலுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட அந்நிறுவன காவலாளி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
துபாய் அல் நகீல் பகுதியில் உள்ள நிறுவன ஒன்றில் கணக்காளரைத் தாக்கி அங்கிருந்த மொத்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி, ஆதாரங்கள், கைரேகைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் சிசிடிவி காட்சிகள் மூலம் 4 குற்றவாளிகளை கைது செய்தனர்.
குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் 4 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தண்டனைக் காலம் முடிந்த பிறகு குற்றவாளிகள் நாடு கடத்தப்படவும் உத்தரவிடப்பட்டது.