துபாயில் கிரேன் இயக்கும் தொழிலாளி வங்கி கணக்கில் மோசடி – 25 வருட உழைப்பு வீணாய் போன சோகம்!

A Pakistani crane operator in Dubai said he has lost his life-savings after Dh127,500 was fraudulently transferred out of his bank account ! (Image Credit: Gulf News)

பாகிஸ்தானை சேர்ந்த கிரேன் இயக்கும் தொழிலாளி துபாயில் வசித்து வருகிறார். அவருடைய வங்கி கணக்கில் மோசடி கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.

அப்துல் கையும் அப்துல் ஹக் (வயது 69) என்பவருடைய வாழ்நாள் சேமிப்பு சுமார் 1,27,500 திரகம் மோசடி செய்யப்பட்டு வங்கியிலிருந்து சுத்தமாக திருடப்பட்டுள்ளது. இந்த செய்தி அமீரக வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்துல் கையும் கூறுகையில்; இதுவரை நான் எந்த வித ஆன்லைன் வங்கி பரிவர்த்தனையும் செய்ததில்லை என்றும், மேலும் கிரெடிட் கார்டு தான் பயன்படுத்தியது இல்லை என்றும், ஏடிஎம் கார்டு மற்றும் வங்கி சம்மந்தமான எந்த வித தகவல்களையும் பிறரிடம் பகிர்ந்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.

25 வருடமாக ஒரே வங்கியில், ஒரே வங்கி கணக்கு மட்டுமே தான் பராமரித்து வருவதாகவும் கூறினார். மேலும், தன்னுடைய 25 வருட உழைப்பின் ஊதியம் வெறும் 15 நிமிடத்தில் காணாமல் போனதாகவும் மிக வருத்தத்துடன் அவர் கூறினார்.

அப்துல் கையும் முதன் முதலில் அமீரகத்திற்கு 1972 ஆம் ஆண்டு வருகை தந்தார். கிரேன் இயக்கியாக ஜெபெல் அலியில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கையும் ஆன்லைன் வங்கி கணக்கு துவங்குதல் மற்றும் பணம் பரிவர்த்தனை தொடர்பாக எந்த வித அழைப்புகளோ அல்லது குறுஞ்செய்திகளோ பெறவில்லை என்று கூறியுள்ளார்.

Source : Gulf News

Loading...