துபாயின் பட்டத்து இளவரசர் மதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான், தனது இரட்டையர்களின் முதல் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் அவர்கள் பிறந்தபோது அவர்களுடன் எடுத்த ஒரு Throwback புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
மதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், இரட்டையர்களின் பிறந்த நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராமில் அதை பகிர்ந்த அவர், “இந்தப் புகைப்படம் என்னமோ நேற்று எடுத்தது போல உணர்கிறேன், அதற்குள் இன்றோடு ஒரு வருடம் கடந்துவிட்டது.
“ரஷித் & ஷைகா மற்றும் உலக குழந்தைகள் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்”, என்று அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.
Dubai Crown Prince Insta Story
கடந்த மே 20, 2021 அன்று, ஷேக் ஹம்தான் மற்றும் ஷேக் ஷேக்கா பின்ட் சயீத் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அப்போது இளவரசர் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு பாதங்களின் படம் ஒன்றை பகிர்ந்து தனக்கு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பிறந்திருப்பதை அறிவித்தார்.
அடுத்த நாளான மே 21 2021 அன்று, பெருமிதம் கொண்ட அந்த தந்தை தனது பிறந்த குழந்தைகளின் மற்றொரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.
ஷேக் ஹம்தான் கடந்த மே 2019ல் ஷேக்கா ஷைக்கா பின்ட் சயீத் பின் தானி அல் மக்தூமை துபாயில் அனைத்து ஆட்சியாளர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.