UAE Tamil Web

துபாயில் புதிதாக தொடங்கப்பட்ட பேருந்து மற்றும் டாக்ஸிகளுக்கான வழித்தடத்தை பயன்படுத்தினால் 600 திர்ஹம் அபராதம்.!

bus

துபாயில் புதிதாக திறக்கப்பட்ட பேருந்து வழித்தடத்தை பயன்படுத்தும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு 600 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

தலித் பின் வாலீத் தெருவில் பேருந்து பயணத்திற்கென பிரத்தியேகமாக புதிதாக திறக்கப்பட்ட வழித்தடத்தை தவறாக பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு வரும் பிப்ரவரி 7, ஞாயிற்றுக்கிழமை முதல் 600 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை (இன்று) தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி பேருந்து வழித்தடமானது புதிதாக திறக்கப்பட்டது. இது குறித்து முன்பே நாம் பதிவிட்டிருந்தோம். திறக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை எவ்வித அபராதமும் விதிக்கப்படவில்லை. ஆனால் வரும் 7 ஆம் தேதி முதல் கண்டிப்பாக அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழித்தடமானது 22 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) கீழ் இயங்கும் பேருந்து மற்றும் டாக்ஸி மட்டுமே இந்த வழித்தடத்தை பயன்படுத்த அனுமதி உண்டு. அதை தவிர மற்ற வாகன ஓட்டிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அபராதம் விதிக்கப்படுவதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், வாகன நெரிசலை குறைத்து பயண நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும், பயணிகளின் இலகுவான பேருந்து பயணத்திற்காகவும், பேருந்தில் பயணம் செய்ய விரும்புபவர்களின் மனநிறைவிற்காகவும், பேருந்து சேவையை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி மற்ற அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.