UAE Tamil Web

“மனுஷன் குடிப்பானா இந்தக் காப்பிய”.. கொடுத்த காபி பிடிக்கவில்லை எனக்கூறிய வீட்டு உரிமையாளரின் கழுத்தை நெறித்துக்கொன்ற பணியாளர் – துபாயில் பயங்கரம்..!

court

துபாயின் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் வசித்து வந்தது அந்த தம்பதி. கணவர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு, மேலும் சில உடல் உபாதைகள் காரணமாக தனிப்பட்ட கவனம் தேவைப்படும் நபராக இருந்தததால் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவரை வேலைக்கு வைத்திருக்கிறார் அவரது மனைவி (42).

கடந்தாண்டு ஜூன் 15 ஆம் தேதி, ஷாப்பிங் செய்வதற்காக அந்தப் பெண் வெளியே சென்றிருக்கிறார். நடுவே, அவரது பணியாளர் போன் செய்து, அவரது கணவர் நினைவிழந்துவிட்டதாகவும் உடனடியாக வரும்படியும் கூறியிருக்கிறார்.

அந்தப் பெண் வீட்டிற்குள் நுழையும்போது ஃபிரிட்ஜ் அருகே அவரது கணவர் விழுந்து கிடந்திருக்கிறார். அவர் இன்னும் உயிரோடு இருப்பதாகவும் நினைவை மட்டுமே இழந்திருப்பதாகவும் பாகிஸ்தான் ஆசாமி தெரிவித்திருக்கிறார்.

உடனேயே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த பெண், தனது இரு வளர்ப்பு மகன்களையும் அழைத்திருக்கிறார். விஷயமறிந்து ஓடிவந்த அவரது வளர்ப்பு மகன்கள், அவரைக் கட்டியணைக்கையில் இறந்தவரின் கழுத்தில் இஸார் (ezar) ன் (அரபு ஆண்கள் இடுப்பில் அணியும் உடை) துணுக்குகள் இருப்பதைப் பார்த்துள்ளார்.

விரைந்து வந்த ஆம்புலன்ஸ் அதிகாரிகள், முதியவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த அவர், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். உடனே தலைமறைவான நபரை அடுத்த நாளே பிடித்து கைது செய்தது காவல்துறை.

விசாரணையின் போது, “காபி சரியாக போடவில்லை என்பதால் தன்னுடைய இஸார் கொண்டு எனது கழுத்தை முதியவர் நெறிக்கத் துவங்கினார். அதனால் அதிர்ச்சியடைந்து பாதுகாப்பிற்காக நான் அவரது கழுத்தை நெறித்தேன்” என பாகிஸ்தான் ஆசாமி கூறியிருக்கிறார்.

மருத்துவ அறிக்கையில் பாகிஸ்தான் ஆசாமி கூறியது பொய் என நிரூபிக்கப்பட்டதால் அவரது வாதத்தை மறுத்த நீதிபதிகள் அவருக்கு குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை வழங்கினர். தண்டனை முடிவடைந்தவுடன் அவர் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

court
0 Shares
Share via
Copy link