UAE Tamil Web

துபாய் Duty Free Draw.. 7 கோடி ஜாக்பாட்டை தட்டிச்சென்ற இந்தியர் – 20 ஆண்டுகால கனவு நனவானதாக மகிழ்ச்சி

துபாயில் கடந்த வாரம் நடந்த Dubai Duty Free குலுக்கல் போட்டியில் 63 வயதான துபாயைச் சேர்ந்த இந்திய புத்தகக் கடை உரிமையாளர் ஒரு மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7,98,71,800 பரிசை வென்று அசத்தியுள்ளார்.

டிராவில் வெற்றி பெற்ற Rehoboth Daniel என்ற அந்த 63 வயது நபர், அதிர்ஷ்ட டிக்கெட் எண் 1002ஐ வாங்கிய பிறகு மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 394ல் ஒரு மில்லியன் டாலர்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெஹோபோத் டேனியல் கடந்த 20 ஆண்டுகளாக மில்லினியம் மில்லியனர் குலுக்கலில் தொடர்ந்து பங்கேற்பவர் என்றும் கூறப்படுகிறது.

“இந்த அற்புதமான வாய்ப்புக்கு நான் Dubai Duty Free இஸ்தாபனத்துக்கு நன்றி கூற விரும்புகிறேன்” என்றார் டேனியல். 1999ல் மில்லினியம் மில்லியனர் ஷோ தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு மில்லியன் டாலர்களை வென்ற 193வது இந்தியர் டேனியல் ஆவார்.

மேலும் துபாயில் வசிக்கும் 41 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஞ்சீவ் சர்மா, அவரது டிக்கெட் எண். ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 505ல் 0668 அவருக்கு ஒரு ஸ்போர்ட்டியான BMW F 850 ​​GS மோட்டார் பைக் கிடைத்துள்ளது.

துபாயில் மில்லினியம் மில்லியனர் துபாய் டியூட்டி-ஃப்ரீ டிக்கெட்டுகளை வாங்குபவர்களில் இந்தியர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap