36-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு துபாய் டூட்டி பிரீயில் 25% தள்ளுபடி அறிவிப்பு.

dubai-duty-free

துபாய் டூட்டி ஃப்ரீ தனது 36 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் வருடாந்திர மூன்று நாள் சலுகையையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, துபாயின் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் வழியாக பயணிக்கும் பயணிகள், டிசம்பர் 20 நள்ளிரவுக்கு முன்பு வரை தான் வாங்கும் பொருட்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி கோர முடியும்.

மேலும் துபாய் இன்டர்நேஷனல் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு இதே போல் நடந்த, 72 மணி நேரத்திற்கும் மேலான ஆண்டு வருடாந்திர தள்ளுபடியில், மொத்தம் 191 மில்லியன் திர்ஹம்ஸிற்கு பொருட்கள் விற்பனையானது. அதில் அழகுசாதனப் பொருட்கள் 46 மில்லியன் திர்ஹம்ஸிற்கும், கடிகாரங்கள் 35.48 மில்லியன் திர்ஹம்ஸிற்கும் மற்றும் வாசனை திரவியங்கள் 34.23 மில்லியன் திர்ஹம்ஸிற்கும் விற்பனை செய்யப்பட்டது.

இது பற்றி துபாய் டூட்டி ஃப்ரீயின் நிர்வாக துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கோல்ம் மெக்லொஹ்லின் (Colm McLoughlin) கூறுகையில், “இந்த மூன்று நாட்களுக்கு பரவியிருக்கும் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் மற்றும் அதை அனுபவிக்க வரும் மக்களின் மனநிலையையும் காண நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு 25 சதவிகித தள்ளுபடியை வழங்குவது ஆண்டு முழுவதும் அவர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவுக்கு அவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு வாய்ப்பாக மாறியுள்ளது.” என்கிறார்.

Loading...