UAE Tamil Web

37 வது ஆண்டுவிழா கொண்டாட்டம் – 25 சதவிகித தள்ளுபடியை அறிவித்திருக்கும் துபாய் டியூட்டி ஃப்ரீ..!

DDF

துபாய் டியூட்டி ஃப்ரீயின் (DDF) 37 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 25 சதவிகித தள்ளுபடியை அந்த நிர்வாகம் அறிவித்திருக்கிறது. டிசம்பர் 18 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரையில் இந்த தள்ளுபடித் திருவிழா தொடர்கிறது.

- Advertisment -

அமீரகத்திலிருந்து பயணிப்பவர்கள், அமீரகத்திற்கு பயணிப்பவர்கள், அமீரகம் வழியாக வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள் என அனைவரும் இந்த தள்ளுபடி திருவிழாவில் பங்கேற்கலாம். அதேபோல அமீரக வாழ் மக்களும் DDF ன் ஹோம் டெலிவரி மூலமாக தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம்.

இதுகுறித்துப் பேசிய DDF ன் நிர்வாக துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கோம் மெக்லூகிளின் (Colm McLoughlin),” ஆண்டு விழா தள்ளுபடி பயணிகளால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். இதனைப் பொறுத்து பல பயணிகள் தங்களது பிரயாணங்களைத் தீர்மானிக்கிறார்கள். இந்தாண்டு எங்களுடன் ஷாப்பிங் செய்வது சற்றே வித்தியாசமாகத் தோன்றினாலும் நேரடியாக அல்லது ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைத் தர தயாராக இருக்கிறோம்” என்றார்.

DDF ன் மில்லினியம் மில்லினியம் டிரா மற்றும் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிக்கெட்டுகளை இதே தள்ளுபடி விலையில் தங்களது பயணத்திற்கு முன்னர் பிரயாணிகள் பெறலாம். DDF ன் கிளிக் & கலெக்ட் சேவை மூலம் முன்கூட்டியே ஆண்டுவிழா தள்ளுபடியில் பொருட்களை வாங்க ப்ரீ ஆர்டர் செய்யலாம்.

அதுமட்டுமல்லாமல் டிசம்பர் 20 ஆம் தேதி, இரண்டு மில்லினியம் மில்லினியம் டிரா மற்றும் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிராக்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.