UAE Tamil Web

25 தொழிலாளர்கள் இணைந்து வாங்கிய துபாய் டியூட்டி ஃரீ டிக்கெட்டிற்கு கிடைத்த 1 மில்லியன் டாலர்கள் பரிசு..!

Dubai Duty Free

அல் கூஸ் பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து சேவை நிறுவனத்தில் பணிபுரியும் 25 தொழிலாளர்கள் இணைந்து வாங்கிய துபாய் டியூட்டி ஃப்ரீ டிக்கெட் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்றிருக்கிறது.

- Advertisment -

துபாய் டியூட்டி ஃப்ரீ டென்னிஸ் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிவடைந்தபிறகு துபாய் டியூட்டி ஃப்ரீ குலுக்கல் நடைபெற்றிருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த ராகுல் கோவிதலா தழவீட்டில் என்னும் 34 வயது இந்தியர் தான் இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். மேற்கண்ட போக்குவரத்து நிறுவனத்தில் ராகுல், மூத்த நிதி அதிகாரியாகப் பணிபுரிந்துவருகிறார்.

12 வருடமாக துபாயில் வசித்துவரும் ராகுல் கடந்த நான்கு வருடமாக அவரது சக ஊழியர்களுடன் இணைந்து துபாய் டியூட்டி ஃரீயில் பங்குபெற்றுவருகிறார்.

துபாய் டியூட்டி ஃப்ரீயின் மில்லினியம் மில்லியனர் டிரா துவங்கிய 1999 ஆம் ஆண்டு முதல் இந்தியர்களே இந்தத் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்றிருக்கின்றனர். இந்த டிராவில் 1 மில்லியன் டாலர் பரிசு பெற்ற 178 வது இந்தியர் ராகுல் ஆவார்.