UAE Tamil Web

கட்டுக்கடங்காத கூட்டம்; ஒரே ஒரு போட்டா – ஷாப்பிங் சென்டருக்கு அபராத ஆப்படித்த துபாய் அதிகாரிகள்..!

social distancing

ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு துபாயின் தேரா பகுதியில் உள்ள ஷாப்பிங் செண்டரில் சமூக இடைவெளி என்றால் என்ன? எனக் கேள்விகேட்கும் அளவிற்கு கூட்டம் கூடியுள்ளது. இதனையடுத்து துபாய் பொருளாதாரத்துறைக்கு இந்தக் கூட்டத்தை போட்டோ பிடித்து ஏதோ ஒரு புண்ணியவான் அனுப்பிவைக்க, கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் துபாய் அரசு அதிகாரிகள் ஷாப்பிங் சென்டருக்கு வந்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்திருக்கின்றனர்.

துபாய் பொருளாதாரத் துறையின் நுகர்வோர் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இந்த அதிரடியை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

மேலும் இதுபோன்ற கொரோனா விதிமீறலில் கடைகள் ஈடுபட்டால் பொதுமக்கள் துபாய் கன்ஸ்யூமர் ஆப் (Dubai Consumer app) மூலமாக புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அஜ்மானில் உள்ள ஷாப்பிங் செண்டரில் அதிரடித் தள்ளுபடி விற்பனை என அறிவிப்பு வெளிவந்த உடனேயே, மக்கள் அந்த விற்பனையகத்திற்கு படையெடுத்துச் சென்றிருக்கிறார்கள். தள்ளுபடியில் வாங்கிக்குவிக்கும் பதற்றத்தில் சமூக இடைவெளியை மறந்தது சமூகம்.

ஷாப்பிங் சென்டருக்குள் கும்பல் கும்பலாக மக்கள் நடமாடும் வீடியோ வெளிவந்த உடனேயே அஜ்மான் அரசு அதிகாரிகள் அந்த ஷாப்பிங் செண்டர் உரிமையாளருக்கு 5000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்தனர்.