UAE Tamil Web

ஜெபல் அலி மெட்ரோ நிலையத்தில் நாளை துளையிடும் பணி நடைபெற உள்ளது – RTA அறிவிப்பு..!

rta

துபாயின் ஜெபல் அலி மெட்ரோ நிலையத்தில் நாளை (ஆகஸ்டு 6) அவசர துளையிடும் பணி நடைபெற இருப்பதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 2 – 4.30 மணிவரையில் இந்தப் பணிகள் நடைபெற இருக்கின்றன.

இதுகுறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் மற்றும் அரசுத் துறைகளின் உத்தரவின்படி ஜெபல் அலி மெட்ரோ நிலையத்தில் நாளை காலை 2 மணிமுதல் 4.30 மணிவரையில் அவசர துளையிடும் பணிகள் நடைபெற இருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

rta
0 Shares
Share via
Copy link