துபாயின் சில பகுதிகளை அனுமதியின்றி ட்ரோன் மூலமாக புகைப்படம் எடுக்க முயன்ற நபருக்கு துபாய் நன்னடத்தை மற்றும் விதிமீறலுக்கான நீதிமன்றம் 5000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்திருக்கிறது.
துபாயில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்துவரும் அரபு ஆண் கடந்த நவம்பர் மாதம் துபாயின் அல் குசைஸ் பகுதியில் தனது ட்ரோனை பறக்கவிட்டுள்ளார்.
அல் குசைஸ் பகுதிக்கு அருகே உள்ளவற்றை புகைப்படமெடுக்க அவர் முயற்சித்ததை அறிந்து காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
துபாயைப் பொறுத்தவரையில் ட்ரோன் உபயோகிக்க வேண்டுமென்றால் உள்ளூர் அரசிடமிருந்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதன் காரணமாகவே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருடைய ட்ரோனை கைப்பற்றவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.