UAE Tamil Web

எமிரேட்ஸ் டிரா: 30 நாட்களில் இருமுறை 77,777 திர்ஹமஸ்களை வென்ற இந்தியர்.!

எமிரேட்ஸ் டிராவில் இந்தியர் ஒருவர் கடந்த 30 நாட்களில் இரண்டு முறை 77,777 திர்ஹமஸ்களை வென்றுள்ளார்.

ஸ்ரீராம் என்பவர் கடந்த 16 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வருகிறார். தான் வெற்றிபெற்றது குறித்து தெரிவித்துள்ளதாவது, “நான் தொடர்ந்து டிராவில் ஆர்வமாக பங்குபெற்று வருகிறேன். முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். எப்போது வெற்றிபெறுவோம், என்ன நடக்கும் என்று தெரியாது. நான் வெற்றியடந்ததை என்னால் நம முடியவில்லை. திகைத்திவிட்டேன்.

நான் தேர்ந்தெடுத்த எண்கள் 30 நாட்களுக்குள் இரண்டு முறை டிராவில் வந்தது என்றால் என்னால் நம்ப முடியவில்லை, வெற்றி பெற்றது உற்சாகமமக உள்ளது. வெற்றிபெற்ற தொககையை பல்வேறு பங்குகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன,” என  46 வயதான ஸ்ரீராம் சாந்தா நாயக் தெரிவித்துள்ளார்.

இது போன்று அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் பங்குபெற்ற இந்தியர் 25 மில்லியன் திர்ஹம்ஸ் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 Shares
Share via
Copy link