துபாயில் நடந்து வரும் ‘Expo 2020’ கண்காட்சியில் இந்திய அரங்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
அமீரகத்தைச் சேர்ந்த துபாயில் ‘Expo 2020’ கண்காட்சி 2021 அக்டோபர் மாதம் 1-இல் ஆரம்பமானது. இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களில் துபாய் எக்ஸ்போ கண்காட்சியில், இந்திய அரங்கிற்கு வருகையின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
இது குறித்து இந்தியாவின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: துபாய் Expo இந்திய அரங்கிற்கு வருகை தந்தோர் எண்ணிக்கை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்ற 10 லட்சம் இதயங்கள் ஆர்ப்பரித்து அரங்கிற்கு வந்துள்ளன. இந்தியா உலகை கவர்ந்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
துபாய் Expo இந்திய அரங்கில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் பன்முக கலாசார சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
தற்போது இந்திய அரங்கில் ‘ஆந்திரா வாரம்’ கொண்டாடப்படுகிறது. அடுத்து, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் வாரங்கள் கொண்டாடப்பட உள்ளன. துபாய் Expo மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.