துபாய் EXPO 2020 பெவிலியன்கள், பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் நேரத்தை இரவு 11 மணி வரை நீடித்துள்ளது.
பிப்ரவரி 28 ஆம் தேதி வரை 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக என்று துபாய் EXPO 2020 ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர்.
இந்த EXPO கண்காட்சி மார்ச் 31 அன்று முடிவடைய உள்ள நிலையில், பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் நேரத்தை இரவு 11 மணி வரை EXPO குழு நீடித்துள்ளது. இன்னும் 30 நாட்கள் மீத இருக்கும் நிலையில், EXPO-வுக்கான பார்வையாளர்கள் வருகை அதிகரத்தே வருகிறது.
அக்டோபர் 1, 2021 அன்று துபாய் EXPO 2020 திறக்கப்பட்டதிலிருந்து, இறுதி மாதமான மார்ச்சில் அதிகபட்ச பார்வையாளர்கள் உச்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுள்ளது.
துபாய் EXPO 2020 ஒரு சிறப்பு பதிப்பான ‘வெள்ளை பாஸ்போர்ட்’ ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக வழங்கப்பட்ட மஞ்சள் பாஸ்போர்ட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட பெவிலியன்களின் ஸ்டாப் வைத்திருக்கும் அனைத்து பார்வையாளர்களுக்கும் வெள்ளை பாஸ்போர்ட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
