39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

துபாய் : பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான பொருட்கள் பிரத்யேக தள்ளுபடி விலையில் – என்னென்ன பொருட்கள்? எங்கே வாங்கலாம்?

Kipling-dubai1

பேக் டு ஸ்கூல் (back-to-school) எனப்படும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி அளிக்கும் பிரம்மாண்ட தள்ளுபடித் திருவிழா முடிவடையும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக துபாய் திருவிழா மற்றும் சில்லறை ஸ்தாபனம் (DFRE) அறிவித்துள்ளது.

“வெகுநாட்கள் கழித்து குழந்தைகள் பள்ளி செல்ல இருக்கிறார்கள். இதனை மனதில் கொண்டே குழந்தைகள் இப்புதிய கல்வியாண்டை சிறப்பான முறையில் துவங்கிட தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க கூடுதலான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது” என DFRE -ன் தலைமை நிர்வாக அதிகாரியான அகமது அல் காஜா (Ahmed Al Khaja) தெரிவித்தார்.

என்னென்ன பொருட்கள், எங்கே வாங்கலாம்?

உங்களது குழந்தைகளுக்கு புதிய ஸ்கூல் பேக்கை செப்டம்பர் 15 வரையிலும் துபாய் மால், சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மிர்திஃப், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் ஆகிய இடங்களில் உள்ள கிப்ளிங் ஸ்டோர்களில் (Kipling stores) வாங்கி 25 சதவிகிதம் வரை கேஷ்பேக் மற்றும் 500 திர்ஹம்ஸ்க்கு அதிகமாக பொருட்கள் வாங்கி இலவச பரிசுப் பொருட்களையும் வென்றிடுங்கள்.

இந்த பேக் டு ஸ்கூல் தள்ளுபடித் திருவிழாவைப் பயன்படுத்தி, வீட்டு மற்றும் சமையலறை சாதனங்களை ஹோம் சென்டரில் செப்டம்பர் 20 ஆம் தேதி வரையில் வாங்கிடுங்கள். இங்கு குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 20 – 70 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடியானது அளிக்கப்படுகிறது.

துபாய் முழுவதிலும் உள்ள ஸ்ப்லாஷ் சென்டரில் பேக் டு ஸ்கூல் தள்ளுபடித் திருவிழாவை முன்னிட்டு முன்னணி பிராண்ட்களின் ஈசி டு வியர் (easy-to-wear) வகையிலான ஆடைகளை செப்டம்பர் 5 ஆம் தேதிவரையில் தள்ளுபடி விலையில் பெற்றிடுங்கள். ஹாரி பாட்டர், மார்வல் ஸ்கூல் பேக்குகளை 89 திர்ஹம்சிற்கு ஒன்றையும் 149 திர்ஹம்சிற்கு இரண்டையும்  பெறலாம் என்பதையும் மறந்திடவேண்டாம்.

குழந்தைகளுக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தண்ணீர் புட்டிகள் வாங்க நினைப்போர், துபாய் முழுவதிலும் உள்ள லைஃப்ஸ்டைல் கடைகளில் (Lifestyle stores) செப்டம்பர் 20 வரையிலும் வாங்குங்கள். ஏனெனில் அங்கு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களுக்கு 2 வாங்கினால் 1 இலவசம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானிய வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடையான முஜி (Muji) – யில் சேமிப்பு பெட்டிகளுக்கு (storage boxes) செப்டம்பர் 12 ஆம் தேதிவரையில் தள்ளுபடி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் முழுவதிலும் உள்ள ஸ்வரோவ்ஸ்கி (Swarovski) கடையில் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு 600 திர்ஹம்ஸ்க்கும் ஒரு ஸ்வரோவ்ஸ்கி பேனாவை இலவசமாகப் பெற்றிடுங்கள்.

துபாய் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான பல அறிவுசார் மற்றும் செயல்பாடுகளை நடத்திவருகிறது.

KHDA வின் பணியாளர் ஒருவர் மால் ஆஃப் தி எமிரேட்சில் உள்ள எக்ஸ்பீரியன்ஸ் ஸோன் (experience zones) எனும் பகுதியில் செப்டம்பர் 5 வரையிலும், சிட்டி சென்டர் மிர்திஃபில் செப்டம்பர் 9 – 19 ஆம் தேதி வரையிலும் இருப்பார். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அவரிடம் கேள்விகள் கேட்பதோடு, அங்கு நடைபெறும் விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.

செப்டம்பர் 12 வரை துபாய் முழுவதும் உள்ள ஜம்போ ஸ்டோர்களில் பொருட்கள் வாங்கி, கல்விக் கட்டணத்தில் 25 ஆயிரம் தள்ளுபடி பெறுவதற்கான ரேஃபிலுக்குள் நுழைவதற்கான வாய்ப்பினைப் பெறலாம். நீட்டிக்கப்பட்ட இந்த தள்ளுபடித் திருவிழாவை சிறப்பாக பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான பொருட்களை இப்போதே வாங்கிடுங்கள்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!