UAE Tamil Web

மகனது ஆப்ரேஷனுக்குப் பணமில்லாமல் தவித்த தந்தைக்கு மஹ்சூஸ் டிராவில் விழுந்த 10 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு..!

mahzooz

புஜைராவில் உள்ள ஆயில் & கேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பெடாரியோ. 50 வயதான இவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு சமீபத்திய மஹ்சூஸ் டிராவில் 10 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு கிடைத்திருக்கிறது.

கிடைத்த பணத்தினைக்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? எனக் கேட்டதற்கு அவர் கூறிய பதில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெடாரியோவிற்கு 23 மற்றும் 18 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

இவரது இளைய மகன் பிறவியிலேயே பெருமூளை வாத நோயினால் பாதிக்கப்பட்டவர். இதுநாள் வரையிலும் டியூப் மூலமாகவே அவருக்கு உணவு அளிக்கப்பட்டுவருகிறது. நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரால் எல்லோரையும்போல உணவை எடுத்துக்கொள்ள முடியும் என்கிறார் பெடாரியோ.

நீண்ட நாட்களாக அறுவை சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்ததாகவும் தற்போது உரிய நேரத்தில் இந்த பரிசு கிடைத்திருப்பதாகவும் அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.

mahzooz
2 Shares
Share via
Copy link