UAE Tamil Web

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – ஜெபல் அலியைச் சூழ்ந்த கரும்புகை..!

துபாயின் ஜெபல் அலி பகுதியில் இயங்கிவந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சிவில் பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சில நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும் சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தீக்கிரையானதால், அந்தப் பகுதியையே புகை மண்டலம் சூழ்ந்ததாக துபாய் ஊடக அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

2 Shares
Share via
Copy link